காணாமல் போன மலேஷிய விமானத்தை தேடும் நடவடிக்கையில்
ஈடுபடுத்தப்பட்டுள்ள மினி நீர்மூழ்கி கப்பல் தனது பணிகளை முழுமையாக
நிறைவுசெய்துள்ளது.
இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் தேடுதல்
நடவடிக்கைகாக குறித்த நீழ்மூழ்கி கப்பல் ஈடுபடுத்தப்பட்ட போதிலும் தொழில்
நுட்ப கோளாறு காரணமாக இடைநடுவில் கைவிடப்பட்டிருந்தது
இதேவேளை மினி நீர்மூழ்கி கப்பலிலுள்ள தரவுகள் தொடர்பில் தற்போது ஆராய்ந்து வருவதாக
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னர்
மேற்கொள்ளப்பட்ட இரண்டு தேடுதல் நடவடிக்கையின் போது குறிப்பிடத்தக்க
எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காணாமல்
போன விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்து வெளியான சமிக்ஙையை
அடிப்படையாக கொண்டு இந்த தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
No comments:
Post a Comment
Leave A Reply