கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ரயில்வே ஊழியர்கள் சிலர்
இன்று காலை சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
ரயில்வே
திணைக்களத்தில் இருக்க வேண்டிய தொழில்நுட்ப உதவியாளர்களின் எண்ணிக்கை
குறைக்கப்பட்டதை கண்டித்து இந்த உண்ணாவிரதப் போராட்டம்
முன்னெடுக்கப்படுகிறது.
ரயில்வே திணைக்களத்திற்கான தொழில்நட்ப
உதவியாளர்களின் எண்ணிக்கை 8,600 இல் இருந்து 5,000 வரை
குறைக்கப்பட்டுள்ளதென இலங்கை சுதந்திர ரயில்வே ஊழியர்கள் சங்கத்தின் பிரதம
செயலாளர் நதீர மனோஜ் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ரயில்வே
திணைகளத்திற்கான தொழில்நுட்ப உதவியாளர்களின் எண்ணிக்கையை 8,600 ஆக
தொடர்ந்தும் பேணிச் செல்ல அனுமதியளிக்குமாறு முகாமைத்துவ சேவைகள்
திணைக்களத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின்
உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அதிகாரிகளிடம் தொடர்புகொள்வதற்கு மேற்கொண்ட முயற்சிகள் கைகூடவில்லை.
No comments:
Post a Comment
Leave A Reply