பொகவந்தலாவை, லெட்சுமி தோட்டம் மேல்பிரிவை சேர்ந்த 60 வயது மதிக்கதக்க
நோயாளியான பெண் ஒருவர் வீதியில் கிடந்தமை தொடர்பில் பொகவந்தலாவை பொலிஸார்
விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இச் சம்பவம் இன்று(21) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண் சுகயீனமடைந்த நிலையில் வீதியில் கிடந்ததை கண்ட தோட்ட மக்கள் 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொகவந்தலாவை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்
வள்ளியம்மா எனும் குறித்த பெண் மீட்கப்பட்டு பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply