blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, April 12, 2014

கல்முனையில் தரமற்ற உணவுப் பொருட்கள் அழிப்பு


கல்முனை கடற்கரைப்பள்ளி கொடியேற்று விழா வளாகத்தில் அமைந்துள்ள ஹோட்டல்கள், உணவகங்களில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

  (வியாழக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு எரியூட்டி அழிக்கப்பட்டுள்ளன.

கல்முனை மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சி.எம்.மாஹிர் தலைமையில், இத் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் பரிசோதிக்கப்பட்டு - பொது மக்களின் நுகர்வுக்கு உதவாத உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன் அவற்றின் உரிமையாளர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

அதேவேளை இவ்வாறு கைப்பற்றப்பட்ட உணவுப் பொருட்கள் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வளாகத்தில் வைத்து எரியூட்டி அழிக்கப்பட்டன.

தற்போது கல்முனை கடற்கரைப்பள்ளி நாகூர் ஆண்டகையின் 192 ஆவது கொடியேற்று விழா இடம்பெற்று வருவதும் அதில் நாளாந்தம் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இதனைக் கருத்திற் கொண்டு பொது மக்களின் நலன்களை உறுதிப்படுத்தும் நோக்கில் இவ்வாறு திடீர் பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கல்முனை மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சி.எம்.மாஹிர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►