
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெய்னாகாடு பிரதேசத்திலுள்ள சாவாறு ஆற்றில் நீராடிக்கொண்டிருந்தபோது, நீரில் மூழ்கி காணாமல் போன நெய்னாகாடு பிரதேசத்தைச் சேர்ந்த அறபாத் பாத்திமா சிபானா (வயது 11) என்ற சிறுமியை தேடி வருவதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
செவ்வாய்க்கிழமை (08) மாலை தனது வீட்டுக்கு அருகிலுள்ள மேற்படி ஆற்றில் உறவினர்களுடன் குளித்துக்கொண்டிருந்த இச்சிறுமி, திடீரென்று நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளாள்.
இது தொடர்பில் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து, ஒலுவில் கடற்படை அதிகாரிகளும் பிரதேசவாசிகளும் இச்சிறுமியை தேடி வருவதாகவும் பொலிஸார் கூறினர்.
No comments:
Post a Comment
Leave A Reply