வாழைச்சேனை கடதாசி ஆலையின் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கிடையில் ஏற்பட்ட
மோதலில் காயமடைந்த இரண்டு ஊழியர்கள் இன்று(09) பிற்பகல் வாழைச்சேனை ஆதார
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 5 மாத காலமாக கடதாசி ஆலையின் ஊழியர்களுக்கான சம்பளம் வழங்கப்படாத
நிலையில், தொழிற்சங்கம் ஒன்றி ஊழியர்களுக்கு மாத்திரம் இன்று சம்பளம்
வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போது இரு தரப்பினரிடையே முறுகல்
நிலை தோன்றியுள்ளது.
குறித்த கடதாசி ஆலையில் பணிபுரியும் 154 ஊழியர்களும் தமது சம்பளத்தை
தருமாறு கோரி கடந்த ஜனவரி மாதம் இரண்டாம் வாரம் முதல் பணிபுறக்கணிப்பில்
ஈடுபட்டு வருகின்றனர்.
இவ் ஆலையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தொழிலாளர் சங்கம், ஐக்கிய தேசியக்
கட்சி தொழிலாளர் சங்கம், சுதந்திர வர்த்தக வலய பொது ஊழியர் சங்கம் ஆகிய
மூன்று தொழிலாளர் சங்கங்கள் இயங்கி வருகின்றது.
குறித்த ஆலையின்; ஊழியர்களது சம்பள நிலுவையை வழங்குவதற்காக அரசாங்கத்தால்
மூன்று கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் எனினும் அதனை வழங்காது இரண்டு
மாதத்திற்கான சம்பளம் மாத்திரம் வழங்குவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனை ஏற்றக்கொள்ள முடியாதெனவும் தமது முழு சம்பளத்தையும் வழங்குமாறு இரண்டு தொழிற்சங்கங்களை சேர்ந்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தொழிலாளர் சங்க
உறுப்பினர்கள் பதினொரு பேருக்கு மாத்திரம் சம்பளம் வழங்குவதற்கான நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்ட நிலையில், மற்றய இரு சங்கங்களின் உறுப்பினர்களும் இதற்கு
எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
இதன் பின்னர் இரு தரப்பினரிடையேயும் மோதல் ஏற்ப்பட்டுள்ளது.
இதன் போது காயமடைந்த இரண்டு பேர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில்
எமது தளத்தை பார்வையிட்டோர்
Wednesday, April 9, 2014
வாழைச்சேனை கடதாசி ஆலையின் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த இரண்டு ஊழியர்கள் இன்று(09) பிற்பகல் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் |||ஆம் தரத்திர்க்கு சேர்த்துக்கொள்ளும் திறந்த போட்டிப் பரீட்சை..
-
கம்பஹா மாவட்டத்தில் உள்ள உற்பத்தி நிலையம் ஒன்றிலிருந்து மண்ணெண்ணெய் கலந்த தண்ணீர் போத்தல்களை நுகர்வோர் அபிவிருத்தி அதிகார சபையினர் கைப்பற்ற...
-
நேற்று கல்முனை பிரதேச செயலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் தலைமையில் இடம்பெற்றது இதில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள்,
-
தமது புதல்வனின் முதலாவது மனைவியையும் பிள்ளையையும் கவனித்துக் கொண்டு அவர்களுடன் 76 வயது ஒய்வு பெற்ற ஆசிரியையான தமது தாயை கொடுமைப்படுத்திய ...
No comments:
Post a Comment
Leave A Reply