பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் இன்று கொம்பனிவீதி பொலிஸ் நிலையத்தில் ஆஜரானார்.
ஜானதிக பலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் வட்டரெக்க விஜித தேரர் வழங்கிய முறைப்பாட்டை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாம் ஒழுங்கு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் நுழைந்து அமைதியின்மையை ஏற்படுத்தியமை தொடர்பில் விஜித்த தேரரால், ஞானசாரதேரர் மீது கொம்பனி வீதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதன்படி இன்று பொலிஸ் நிலையத்தில் கலபொட அத்தே ஞானசார தேரர் ஆஜரானதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது ஊடகவியலாளர்களுக்கு கருத்து வௌியிட்ட ஞானசாரதேரர், தாம் சட்டத்தை மதிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply