நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள மூலோபாய அபிவிருத்தி
கட்டளைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற
உறுப்பினர்கள் சிலர், கொழும்பு டீ.ஆர்.விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள
கெசினோ சூதாட்ட நிலையமொன்றுக்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்றை
ஆரம்பித்துள்ளனர்.
மூலோபாயம் எனும் வார்த்தையை அகற்றிவிட்டு சூதாட்டத்தை சட்டமாக்குவதற்கு
அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக கழுதைகளுடன் ஆர்ப்பாட்டத்தில்
கலந்துகொண்ட ஐ.தே.க எம்.பி.க்களும் ஆதரவாளர்களுக்கும் கோஷமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, கழுதையொன்றின் மீது அமர்ந்தவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Leave A Reply