ஐ.பி.எல் தொடரில் துடுப்பாட்டத்தில் அதிரடியாக ஓட்டங்களைக் குவித்து வரும் டேவிட் மில்லருக்கு புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது.
டேவிட்
மில்லர் என்ற பெயருக்கு பதிலாக அவரை ‘கில்லர் மில்லர்’ (Killer Miller) என
தற்போது கிரிக்கெட் விமர்சகர்கள் அழைக்க ஆரம்பித்துள்ளனர்.
மில்லர்
50 ஓட்டங்களைப் பெற்றபோது மைதானத்தில் பொருத்தப்பட்டிருந்த டிஜிட்டல்
திரையில் Killer Miller என்ற பெயரை காணக்கூடியதாகவும் இருந்தது.
நேற்றைய போட்டியில் மில்லர் 19 பந்துகளில் 5 சிக்ஸ்ர்கள் அடங்களாக 52 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
ஏழாவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் நேற்று இடம்பெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.
இந்த போட்டியில் டேவிட் மில்லர் குல்கர்னி வீசிய 18ஆவது ஓவரில் 4 சிக்சர்களை அடித்து வெற்றிக்கு வித்திட்டார்.
இதைத் தொடர்ந்து 19ஆவது ஓவரில் சிக்சருடன் இன்னிங்ஸை நிறைவு செய்தார் மில்லர்.
No comments:
Post a Comment
Leave A Reply