blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Sunday, April 13, 2014

இன்று மோடி - ரஜினி சந்திப்பு?

இன்று மோடி - ரஜினி சந்திப்பு?


தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக அக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (13) சென்னை செல்கிறார்.

மீனம்பாக்கம் விமான நிலையம் எதிரே உள்ள ஏ.எம். ஜெயின் கல்லூரி மைதானத்தில் மாலை 6 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மோடி பேசுகிறார்.

மீனம்பாக்கம் பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு அன்று இரவே குஜராத் செல்கிறார்.

முன்னதாக நடிகர் ரஜினிகாந்தை நரேந்திர மோடி சந்தித்துப் பேசவுள்ளார். இத்தகவலை பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் சென்னையில் சனிக்கிழமை தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து மோடி, ஏப்ரல் 16, 17 திகதிகளில் மீண்டும் தமிழகத்துக்கு பிரசாரத்துக்காக வருகிறார்.

கிருஷ்ணகிரி தொகுதிக்கு உள்பட்ட பர்கூரில் 16-ஆம் திகதி கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மோடி பேசுகிறார்.

பர்கூரைத் தொடர்ந்து சேலம், ஈரோடு, கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டங்களிலும் அவர் பேசுகிறார். இத்தகவலை பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி கிருஷ்ணகிரியில் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►