நிந்தவூர் பிரதேச செயலக கழகங்களுக்கிடையிலான எல்லே போட்டிகள் 2014 - 04 -
12, நிந்தவூர் பொது மைதானத்தில் நிந்தவூர் பிரதேச செயலக விளையாட்டு
உத்தியோகத்தர் தலைமையில் ஆரம்பமானது. ஒன்பது கழகங்கள் பங்குபற்றிய
இப்போட்டியில் நிந்தவூர் கென்ட் மற்றும் நிந்தவூர் முத்தகீன் ஆகிய கழகங்கள்
இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன.
முதலில் துடுப்பெடுத்தாடிய முத்தகீன் கழகம் 2 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கென்ட் விளையாட்டுக் கழகம் 3 ஓட்டங்களைப்
பூர்த்தி செய்து நிந்தவூர் பிரதேச செயலக எல்லே போட்டி - 2014 யின்
சாம்பியனாக தெரிவாகியது. இரண்டாம் இடத்தினை முத்தகீன் கழகம்
பெற்றுக்கொண்டது.
கென்ட் அணியின் சிரேஷ்ட வீரர் TKM.Zawahir நீண்ட நாள் உபாதையின் பின் கலந்து கொண்டமை அனைவரினதும் கவனத்தை ஈர்த்திருந்தது.
கென்ட் அணியின் சிரேஷ்ட வீரர் TKM.Zawahir நீண்ட நாள் உபாதையின் பின் கலந்து கொண்டமை அனைவரினதும் கவனத்தை ஈர்த்திருந்தது.
அத்தோடு கென்ட் அணியின் மூத்த வீரர்களான Dr. Fariz Ahamed, Jameel,
Hassan, Ashraff, Majeed ஆகியோர் இங்கு கலந்து வீரர்களை உற்சாகப்
படுத்தியது சிறப்பம்சமாகும்.
No comments:
Post a Comment
Leave A Reply