யுக்ரைன் விவகாரத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடீமிர் புட்டினுக்கு அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா அழுத்தம் கொடுத்துள்ளார்.
செல்வாக்கினைப்
பயன்படுத்தி, யுக்ரைய்னின் கிழக்குப் பிராந்தியத்தில்
ஏற்பட்டுள்ள
பிரிவினையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
யுக்ரைனின்
கிழக்கு பிராந்தியத்திலுள்ள அரச கட்டடங்களை ரஷ்ய ஆதரவு ஆர்ப்பா
ட்ட
காரர்கள் கைப்பற்றியுள்ளமை அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து
ரஷ்ய ஜனாதிபதி விளாடீமீர் புட்டினுடன் தொலைபேசியில் கலந்துரையாடும் போது
அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.
யுக்ரைனின்
கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையுடன் தமக்கு
தொடர்புள்ளதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ரஷ்ய ஜனாதிபதி இதன்போது
நிராகரித்துள்ளார்.
தடைக்கு உட்படுத்தப்பட்ட ரஷ்யர்களின் எண்ணிக்கையை
மேலும் அதிகரிக்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார அமைச்சர்கள்
தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply