blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Thursday, April 10, 2014

தீவிரவாதத்துடன் தொடர்புடையவர்கள் என அறிவிக்கப்பட்ட 423 பேர் சட்ட நிவாரணம் தேடிக்கொள்ளலாம் இலங்கை அரசு அறிவிப்பு

கொழும்பு, தீவிரவாதத்துடன் தொடர்புடையவர்கள் என அறிவிக்கப்பட்ட 423 பேர் சட்ட நிவாரணம் தேடிக்கொள்ளலாம் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.
விடுதலைப்புலிகளுக்கு தடை
இலங்கை அரசு கடந்த வாரம் விடுதலைப்புலிகள் மற்றும் 15 தமிழ் அமைப்புகளை தடை செய்து உத்தரவிட்டது. மேலும்,
அவர்களுடன் இலங்கை குடிமக்கள் எந்த விதமான தொடர்புகளும் வைத்துக்கொள்ளக்கூடாது எனவும் ஆணையிட்டது.
மேலும், இந்தியாவில் வசிக்கிற 32 இலங்கைவாசிகள் உள்பட 423 பேர் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள், தீவிரவாதத்துக்கு நிதி உதவி அளித்தவர்கள் என இலங்கை அரசு அறிவிப்பு வெளியிட்டது.
சட்ட நிவாரணம்
இந்த நிலையில், கொழும்பு நகரில், ராணுவ அமைச்சக செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ரூபன் வானிகசூரியா நேற்று கூறியதாவது:–
423 பேர் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள், நிதி உதவி செய்கிறவர்கள் என அறிவித்து இருக்கிறோம். ஆனால் அவர்களுக்கு தடை விதிக்கப்படவில்லை. இது தொடர்பாக அவர்களுக்கு ஏதேனும் பிரச்சினை இருந்தால், அவர்கள் சட்ட நிவாரணம் தேடிக்கொள்ளலாம்.
எங்களது நடவடிக்கையில் தவறு உள்ளது என நீதிமன்றம் கண்டறிந்தால், அவர்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள், நிதி உதவியாளர்கள் என்ற பட்டியலில் இருந்து நீக்கப்படவும் செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வெளிநாடுகளுக்கு வேண்டுகோள்
இதற்கிடையே, ‘ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம் 1373– எல்லா நாடுகளையும் கட்டுப்படுத்தும். எனவே அறிவிக்கப்பட்ட குழுக்கள் மற்றும் தனிநபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வெளிநாட்டு அரசுகளை கேட்டுக்கொள்வோம்’ என இலங்கை ராணுவ அமைச்சகம் கூறியது.
ஆனால் இலங்கை அரசின் இந்த நடவடிக்கையை நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிற மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு குறை கூறியுள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பு கருத்து தெரிவிக்கையில், ‘‘தமிழ் அமைப்புகளை கருணையற்று கட்டுப்படுத்துவதற்காகத்தான் இலங்கை அரசு இந்த தெளிவில்லாத தீவிரவாத தடுப்பு ஒழுங்குமுறையை பயன்படுத்துகிறது. இந்த விரிவான தடை, இலங்கையில் உள்ளூர் தமிழ் ஆர்வலர்களையும், அரசியல்வாதிகளையும் தண்டிப்பதற்கு பயன்படுத்தப்படலாம்’’ என கூறியது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►