வாஷிங்டன், அமெரிக்காவில் 2016–ம் ஆண்டு நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் போட்டியிடலாம் என தெரிய வந்துள்ளது.
சான்பிரான்சிஸ்கோ நகரில் நடந்த மாநாடு ஒன்றில் ஹிலாரி கிளிண்டன் பங்கேற்றார். அப்போது
அவரிடம், ‘‘உங்கள் எதிர்காலத்திட்டம் என்ன? நீங்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போகிறீர்களா? நீங்கள் அதை விரும்பினால் இங்கே அறிவிக்கலாமே?’’ என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு ஹிலாரி கிளிண்டன், ‘‘நீங்கள் எல்லாரும் இப்படி என்னை கேட்பதையும், எனக்கு ஊக்கம் அளிப்பதையும், மிகுந்த கவுரவமாக கருதுகிறேன். நான் அதுபற்றி இப்போது சிந்தித்து வருகிறேன். இந்த சிந்தனை இன்னும் சிறிது காலம் தொடரும்’’ என பதில் அளித்தார்.
ஹிலாரி கிளிண்டன், கடந்த 2008–ம் ஆண்டு ஜனநாயகக்கட்சி சார்பில் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக களம் இறங்குவதற்கு நடந்த தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி ஒபாமாவிடம் தோல்வி அடைந்தது நினைவுகூரத்தக்கது.
No comments:
Post a Comment
Leave A Reply