இம்முறை சிறுபோக நெற்செய்கை 25 வீதத்தினால் வீழ்ச்சியடையலாம் என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவிக்கின்றது.
நெல்
பயிரிடக்கூடிய பகுதிகளில் 85 வீத
செய்கை மேற்கொள்ளப்படுகின்ற போதிலும்,
இம்முறை 60 வீதமே நெல் பயிரிடப்படவுள்ளதாக திணைக்களத்தின் நீர்
முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் ஜானகி மீகஸ்தென்ன
சுட்டிக்காட்டுகின்றார்.
நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழுள்ள நீருள்ள
நீர்த்தேக்கங்களின் ஊடாக 2014 ஆம் ஆண்டு சிறுபோக பயிற்செய்கைக்கான நீர்
விநியோகிக்கப்படுவதாக திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பிரிவின்
பணிப்பாளர் கூறுகின்றார்.
நீருள்ள நீர்த்தேக்கங்களின் ஊடாக 100 வீத செய்கையை முன்னெடுக்க எண்ணியுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
குறைந்த நீருள்ள நீர்த்தேக்கங்களின் ஊடாக மேலதிக செய்கையை முன்னெடுக்கவுள்ளதாகவும் பணிப்பாளர் தெரிவிக்கின்றார்.
மேலதிக
செய்கையை முன்னெடுக்க முடியாத நீர்த்தேக்கங்களின் நிலைமை குறித்து ஜூன்
மாதம் 20 ஆம் திகதி வரை அவதானிக்க ஆலோசிக்கப்பட்டுள்ளதாக நீர்பாசன
திணைக்களம் சுட்டிக்காட்டுகின்றது.
ஈர வலயத்தின் நெல் பயிரிடும்
பகுதிகளில் அதிகபட்ச நெற்செய்கையை முன்னெடுக்குமாறு விவசாயிகளுக்கு ஆலோசனை
வழங்கியுள்ளதாக திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர்
ஜானகி மீகஸ்தென்ன குறிப்பிடுகின்றார்.
முதலாவது பருவப்பெயர்ச்சி மழை
மற்றும் தென்மேற்கு பருவ மழை ஈர வலயத்தின் காலி, மாத்தறை, களுத்துறை ஆகிய
மாவட்டங்களுக்கு கிடைப்பதால், சிறுபோக செய்கையை முன்னெடுக்குமாறு
அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நீர்பாசன திணைக்களம் மேலும் தெரிவிக்கின்றது.
No comments:
Post a Comment
Leave A Reply