blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, April 26, 2014

பாலியல் வல்லுறவுகளை ஆயுதமாக கையாண்ட 21 நாடுகளின் பட்டியலில் இலங்கையும்

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பாலியல் வல்லுறவுகளை ஆயுதமாக கையாண்ட 21 நாடுகளின் பட்டியலில் இலங்கையும் சேர்க்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் வன்முறைகள் தொடர்பாக ஆராயும் ஐ.நா. பொதுசெயலாளரின் சிறப்புப் பிரதிநிதி சான்னாப் ஹவா பங்குரா அந்த அறிக்கை தொடர்பாக அறிவித்துள்ளார்.

நியுயோர்க்கில் வைத்தே அவர் இந்த அறிக்கை தொடர்பில் அறிவித்தார்.

யுத்தம் நடைபெறும் நாடுகளில் மிகவும் மோசமான முறையில் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் ஆண்களும் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் இலங்கையின் இறுதிக்கட்ட போரில் இடம்பெற்ற பாலியல் வல்லுறவுகள் குறித்து கவலை வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►