blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Sunday, April 6, 2014

சட்டவிரோதமாக உள்ளூர் துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் ஒருவரை சனிக்கிழமை (05) மாலை கைதுசெய்ததாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட  பாலக்குடா கிராமத்தில்  சட்டவிரோதமாக  உள்ளூர் துப்பாக்கி தயாரிப்பில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் ஒருவரை சனிக்கிழமை (05)  மாலை கைதுசெய்ததாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த  தகவலைத் தொடர்ந்து, சந்தேக நபரின் வீட்டைச்  சுற்றிவளைத்து சோதனையிட்டதாகவும்  இதன்போது துப்பாக்கிக்குரிய பாகங்களுடன் சந்தேக நபரை  (வயது  48) கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

சந்தேக நபரை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►