மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தளவாய்க் கிராமத்தில் விதவைப் பெண் ஒருவரின் வீட்டுக்கு தீ வைத்து எரித்துள்ள சம்பவம் தொடர்பில் 03 இளைஞர்களைக் கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
தொடர்ந்து அந்தக் குடும்பத்துக்கு இம்சை கொடுத்து வந்த தளவாய் கோயில் வீதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரும் அவரது நண்பர்கள் இருவருமே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
தளவாய்க் கிராத்தைச் சேர்ந்த 37 வயதுடைய கணவனை இழந்த 03 பிள்ளைகளின் தாயான குறித்த பெண் வீட்டில் இல்லாத சமயம் பார்த்து அவரது வீட்டுக்கு தீ வைத்துள்ளனர்.
அத்துடன், வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து நொறுக்கியதுடன் வீட்டின் வளவில் இருந்த பயன் தரும் மரங்களுக்கும் தீ வைத்துள்ளனர்.
இந்த சம்பவத்தினால் சுமார் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாடுகளுக்கமைவாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் இன்று காலை குறித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுமுள்ளனர்.
இந்நிலையில் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
@ East news first
எமது தளத்தை பார்வையிட்டோர்
Friday, June 26, 2015
ஏறாவூரில் விதவை பெண் வீட்டிற்கு தீ வைப்பு: இளைஞர்கள் மூவர் கைது
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
வட கிழக்கு மகாண உளவள ஆலோசகர்களுக்கான விஷேட பயிற்சி வகுப்பு அண்மையில் மனநல பயிற்சி நிறுவனம், அங்கொடையில் இடம் பெற்றது.
-
பஸ்யால பகுதியில் பொலிஸாரின் ஆணையை மீறி, பயணித்த மோட்டார் சைக்கிள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
-
பசுபிக் பெருங்கடலில் உள்ள டோங்கா என்ற தீவில் 8 கால்கள் கொண்ட விசித்திரமான நாய்க்குட்டி ஒன்று பிறந்திருப்பது அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த...
-
யாழ்ப்பாணத்திலிருந்து சொகுசு பஸ் ஒன்றில் கேரளா கஞ்சாவை கொழும்புக்கு கொண்டுவர முயற்சித்தபோது கனகராயன்குளம் பகுதியில் கைது செய்யப்பட்ட மூன்...

No comments:
Post a Comment
Leave A Reply