பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கோ மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (09) காலை நாட்டிற்கு வருகைதரவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில்
விக்கிரமசிங்க, அமைச்சர்கள் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து,
கலந்துரையாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதிக்கும், பூட்டான் பிரதமருக்கும் இடையிலான இருதரப்பு
பேச்சுவார்த்தை நாளை (10) இடம்பெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு
குறிப்பிட்டுள்ளது.
இதன்போது ஒப்பந்தங்கள் சிலவும் கைச்சாத்திடப்படவுள்ளன.
அத்துடன் பூட்டான் பிரதமர் அநுராதபுரம் மற்றும் கண்டி நகரங்களுக்கும்
விஜயம் செய்யவுள்ளதுடன், பேராதனை பூங்காவிற்கும் செல்லவுள்ளதாக வெளிவிவகார
அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, பூட்டான் பிரதமரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு, இன்று (09)
முதல் எதிர்வரும் 12 ஆம் திகதிவரை கொழும்பு நகரின் சில வீதிகளில் விசேட
போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Thursday, April 9, 2015
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
வட கிழக்கு மகாண உளவள ஆலோசகர்களுக்கான விஷேட பயிற்சி வகுப்பு அண்மையில் மனநல பயிற்சி நிறுவனம், அங்கொடையில் இடம் பெற்றது.
-
பஸ்யால பகுதியில் பொலிஸாரின் ஆணையை மீறி, பயணித்த மோட்டார் சைக்கிள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
-
பசுபிக் பெருங்கடலில் உள்ள டோங்கா என்ற தீவில் 8 கால்கள் கொண்ட விசித்திரமான நாய்க்குட்டி ஒன்று பிறந்திருப்பது அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த...
-
யாழ்ப்பாணத்திலிருந்து சொகுசு பஸ் ஒன்றில் கேரளா கஞ்சாவை கொழும்புக்கு கொண்டுவர முயற்சித்தபோது கனகராயன்குளம் பகுதியில் கைது செய்யப்பட்ட மூன்...

No comments:
Post a Comment
Leave A Reply