இந்தியா, அமெரிக்க போன்ற நாடுகளின் புலனாய்வு சேவைகளே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தன்னை தோற்கடித்ததாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.
இந்தியாவின் றோ புலனாய்வு சேவை, அமெரிக்காவின் சி.ஐ.ஏ புலனாய்வு சேவை, எம்.ஐ.6 அமைப்பு ஆகியனவே என்னை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடிக்க நடவடிக்கை எடுத்தன.
என்னை ஆட்சியில் இருந்து அகற்றும் திட்டங்கள் இரண்டு வருடங்களுக்கு முன்னமே ஆரம்பிக்கப்பட்டது.
சீனாவுடன் எனக்கு இருந்த தொடர்புகளே இந்த சதித்திட்டம் அரங்கேற காரணமாக இருந்தது. ஜனாதிபதித் தேர்தலின் இறுதிக்கட்டத்தில் இதனை நான் அறிந்து கொண்டேன்.
இந்திய புலனாய்வு சேவையான றோவின் இந்த செயற்பாடுகளில் இந்திய பிரதமர் மோடிக்கு தொடர்பில்லை.
நான் புதிய அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவிருந்தேன். ஆனால், தொடர்ந்து எனக்கும் எனது குடும்பத்தினருக்கு கொடுக்கப்படும் தொந்தரவுகள் காரணமாக நான் ஒத்துழைப்புகளை வழங்கவில்லை. எங்களை சிறையில் அடைக்கும் தேவையே அரசாங்கத்திற்கு உள்ளது. எந்த சாட்சியங்களும் இல்லாமல் எமது கடவுச்சீட்டுக்களை எடுத்து கொண்டுள்ளனர்.
இப்படியான நிலைமையில் நான் எப்படி அரசியலில் இருந்து ஓய்வுபெற முடியும்?. நான் அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக எப்போதும் கூறியதில்லை. தற்போது நான் ஓய்வெடுத்து கொண்டிருக்கின்றேன் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த இந்திய ஊடகத்திடம் கூறியுள்ளார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Friday, March 13, 2015
‘இந்திய, அமெரிக்க புலனாய்வு சேவைகளே என்னை தோற்கடித்தது': மஹிந்த
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான குழுவினருக்கும் இடையில் ஜனாதிபதி செயலகத...
-
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் குறித்து தாம் தவறாக கணித்துவிட்டதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
-
பொது பல சேனா அமைப்பை தடை செய்யுமாறு கோரி காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பரினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதமொன்று அனுப்பி...
-
சாண்டியாகோ: சிலி நாட்டின் கடற்கரைப் பகுதியில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இடிபாடுகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். நிலநடுக்கத்தை...

No comments:
Post a Comment
Leave A Reply