முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக்குமாறு கோரி கையெழுத்து திரட்டும் நடவடிக்கையொன்று இன்று ஆரம்பிக்கப்பட உள்ளது.
பத்து லட்சம் கையொப்பங்கள் திரட்டப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கையொப்பங்களை திரட்டும் நடவடிக்கை இன்று கொழும்பு கோட்டே ரயில் நிலையத்திற்கு அருகாமையில் ஆரம்பிக்கப்பட உள்ளது.
இன்று பிற்பகல் 3.00 மணிக்கு இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட உள்ளது. மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பிலவின் தலைமையிலான பிவித்துரு ஹெல உறுமய உள்ளிட்ட கட்சிகள் இந்த கையெழுத்து வேட்டையை ஆரம்பிக்க உள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு மஹிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக தெரிவு செய்ய வேண்டுமென கோரியே இந்த பத்து லட்சம் கையொப்பங்கள் திரட்டப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்று நடைபெறவுள்ள கையெழுத்து திரட்டும் ஆரம்ப நிகழ்விற்கு பௌத்த பிக்குகள் மக்கள் பிரதிநிதிகள் பலர் பங்கேற்க உள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Thursday, February 26, 2015
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
யாழ் நகரப்பகுதிக்கு அண்மையில் உள்ள கலவன் பாடசாலை ஒன்றில் கல்வி கற்பித்த ஆசிரியருக்கு காதல் கடிதம் கொடுத் துள்ளார் உயர் தர வகுப்பில் கல்...
-
சிங்கப்பூரைச் சேர்ந்தவர் நோரோஸ் லிண்டா அசட் (வயது 34). இவர் நேற்று (13) தனது வீட்டில் உள்ள கழிவறையைப் பயன்படுத்தியபோது தனது வலது பக்க ...
-
சமூக, கலாசார, பொருளாதார மற்றும் அரசியல்துறைகளில் நாட்டின் அனைத்துப் பிரஜைகளும் கௌரவத்துடன் சம சந்தர்ப்பத்துடன் வாழ்வது உறுதிசெய்யப்படும்
-
உறவுகளானாலும் சரி, நட்புகளானாலும் சரி மனம் விட்டுப் பேச முடிந்த அளவு மட்டுமே ஆழப்படுகின்றன. பலம் பெறுகின்றன. மனம் விட்டுப் பேசுவது...

No comments:
Post a Comment
Leave A Reply