முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த ஒருவரே முதலமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்த பிரகாரம் முதல் இரண்டரை வருடங்களுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும், அடுத்த இரண்டரை வருடங்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் முதலமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என்ற இணக்கப்பாடு உள்ளது.
இந்த நிலையில் இது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையில் ஸ்ரீலங்கா காங்கிரஸ் முதலமைச்சரைக் கொண்டதான கிழக்கு மாகாண சபைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இதன் அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சி அங்கத்தவர்களுக்கும் அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டு ஆட்சி அமைக்கப்படவுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை கிழக்கில் அமையவுள்ள மாகாண அரசுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒத்துழைப்பும் தேவை. இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனுடனும் நாம் பேசுவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Saturday, January 31, 2015
முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த ஒருவரே முதலமைச்சராக வேண்டும்; அடம்பிடிக்கிறார் ரவூப் ஹக்கீம்!!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
நேற்று இரவு 9 மணி அளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் அரச பேருந்துடனான விபத்தில் சம்பவ இடத்திலேயே
-
காதுகளில் கேட்பொலிக் கருவிகளைப் பொருத்தி செல்லிடப்பேசிகள் மூலமாகவும், கேளிக்கைகளில் பெரிய ஒலிப் பெருக்கிகள் மூலமாகவும் அதிக ஒலியில் இசையை ...
-
கொழும்பு அல்லாத நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்று முதல் காலை மற்றும் மாலை வேளைகளில் மின் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நுவரெலியா, பூண்டுலோயா தோட்டப் பகுதியில் இரவு உணவு உட்கொண்ட பின்னர் திடீர் சுகவீனமுற்ற 50 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments:
Post a Comment
Leave A Reply