மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான ஐவரி கோஸ்ட்டில் (Ivory Coast)தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஐவரி கோஸ்ட்டின் யோபோகான் (Yopougon) என்ற பகுதியில் Drissa Coulibaly என்ற நபர் தண்ணீர் பிடிக்க சென்ற இரண்டு சிறுவர்களை கத்தியால் தாக்கிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டான்.
அவன் அளித்த வாக்குமூலத்தை கேட்ட பொலிசார் அதிர்ச்சி அடைந்து, அப்பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கிராமத்தை சுற்றி பல குழந்தைகளின் உடல்கள் தலை, கை, கால் உள்ளிட்ட உறுப்புகள் வெட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன.
இது தொடர்பாக கொலையாளியிடம் தீவிரமாக பொலிசார் விசாரித்த போது, குழந்தைகளின் தலைகளை வெட்டி கொல்ல கடவுள் தான் தனக்கு உத்தரவிட்டார் என்றும், அப்படி செய்தால் தன்னை கடவுள் அரசனாக்குவதாக கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளான்.
மேலும் இதுவரை தான் மூன்று குழந்தைகளின் தலைகளை வெட்டி கொன்றுள்ளதாகவும், இதை செய்ய ஒரு கும்பலே இருப்பதாகவும் அவன் வாக்குமூலம் அளித்துள்ளான்.
கடந்த 3 மாதத்தில் சுமார் 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக கிராம மக்களிடம் பொலிசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது
இதுகுறித்து காவல் துறை தலைமை இயக்குனர் Brindou M'Bia கூறுகையில், பெரும்பாலான குழந்தைகள் உறுப்புகளற்ற நிலையிலேயே கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், கிராமத்தை சுற்றி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் மூட நம்பிக்கை, சடங்கு சம்பிரதாயங்களால் நிகழும் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டு இருப்பதாக ஐவரி கோஸ்ட்டின் உள்துறை அமைச்சர் Hamed Bakayoko வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்த கொடூர் சம்பவங்களை தடுக்க, அப்பகுதியில் குழந்தைகளை கொல்லும் கும்பலை பிடிக்க சுமார் 1500 பொலிசார்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
நேற்று இரவு 9 மணி அளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் அரச பேருந்துடனான விபத்தில் சம்பவ இடத்திலேயே
-
காதுகளில் கேட்பொலிக் கருவிகளைப் பொருத்தி செல்லிடப்பேசிகள் மூலமாகவும், கேளிக்கைகளில் பெரிய ஒலிப் பெருக்கிகள் மூலமாகவும் அதிக ஒலியில் இசையை ...
-
கொழும்பு அல்லாத நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்று முதல் காலை மற்றும் மாலை வேளைகளில் மின் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நுவரெலியா, பூண்டுலோயா தோட்டப் பகுதியில் இரவு உணவு உட்கொண்ட பின்னர் திடீர் சுகவீனமுற்ற 50 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments:
Post a Comment
Leave A Reply