கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற 7 ஆவதும் இறுதியுமான பரபரப்பான சர்வதேச ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 87 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
303 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 45.5 ஓவர்களில் 215 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.
போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் தொடரின் சிறப்பாட்டகாரராகவும் திலகரத்ன டில்ஷான் தெரிவுசெய்யப்பட்டார்.
இந்தப் போட்டியில் மஹேல ஜயவர்தனவின் பந்துவீச்சில் குமார் சங்க்கார ஸ்டம் செய்து இறுதி விக்கெட்டை வீழ்த்தியிருந்தார்.
இலங்கை அணியின் நட்சத்திர வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் சொந்த மண்ணில் விளையாடிய இறுதி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி இதுவென்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment
Leave A Reply