புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட உலங்குவானூர்திகளில் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷவும் அவரது குடும்பத்தினருமே பயணம் செய்வதாக பொது எதிரணியின்
ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
கல்கிசையில் தேசிய
வழக்கறிஞர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கலந்து
கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.அங்கு அவர் மேலும்
தெரிவிக்கையில்,
கடந்த வருடம் ஏழு புதிய உலங்கு வானூர்திகள் மஹிந்த ராஜபக்ஷவின்
அரசாங்கத்தால் கொள்வனவு செய்து கொண்டு வரப்பட்டது எனக்குத் தெரியும்.
இவை
அனைத்தையும் அவர்களது குடும்பத்தினரே அனுபவிக்கின்றனர். காலையில்
உலங்குவானூர்தியில் ஏறி நுவரெலியா செல்வார்கள்.
அங்கிருந்து யாழ்ப்பாணம்
செல்வார்கள். பிறகு மாலையில் கொழும்புக்குத் திரும்புவார்கள்.
ஏழை, பொதுமக்களின் பணத்தை இந்தப் பணக்காரர் தேர்தல்
வியாபாரத்திற்காக செலவு செய்கின்றார்.
எங்களுக்குப் பயந்தே, சமையல் எரிவாயு
மற்றும் பொற்றோலியத்தின் விலையும் குறைக்கப்பட்டது.
கடந்த இரண்டு
வாரத்தில் மட்டுமே இந்த நிலைமை என்றால், எதிர்வரும் நான்கு வாரங்களில்
என்னவெல்லாம் நடக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள் எனவும் அவர்
குறிப்பிட்டிருந்தார்.

No comments:
Post a Comment
Leave A Reply