இந்தோனேஷியாவில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டு, சூட்கேஸ்ஸில் அடைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேஷியாவில் உள்ள ஜகர்தா என்ற இடத்தில் உள்ள ஒரு பிரபல நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த ஒரு காதல் ஜோடி ஒன்று தங்கியிருந்த அறையில் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது:
ஹோட்டலில் தங்கியிருந்த ஒரு காதல் ஜோடி, அறையை காலி செய்யும் போது மிகப்பெரிய சூட்கேஸ் ஒன்றை எடுத்துக்கொண்டு வெளியே வந்தனர்.
ஆனால் பல மணிநேரம் ஆகியும் அந்த தம்பதிகள் திரும்பாததால் சந்தேகம் அடைந்த ஓட்டல் நிர்வாகத்தினர் சூட்கேஸின் கவரை பிரித்து பார்த்தபோது அதன்மேல் ரத்தக்கறை இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் காவல்துறையினர்களுக்கு தகவல் கொடுத்து அவர்கள் முன் சூட்கேஸை திறந்து பார்த்தபோது, அதில் 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் பிணம் நிர்வாண நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து உடனடியாக ஜகார்தா பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஷீலா வென் வியஸ்ஸி மேக் என்ற 62 வயது பெண்மணியே இவர்களால் கொலை செய்யப்பட்டவராவர்.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
No comments:
Post a Comment
Leave A Reply