இரவுநேர ரோந்து சேவையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் நடத்திய திடீர் சோதனையின்போது இந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் இளைஞன் சிலாவத்துறை பொலிஸாரால் நேற்று ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.
கட்டடத் தொழிலாளியான இந்த இளைஞன் கிளிநொச்சி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதுடன், தொழில் நிமித்தம் சிலாவத்துறை பகுதியில் தங்கியிருந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து 15,000 ரூபா சொந்தப் பிணையில் செல்வதற்கு இளைஞனுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியதுடன், எதிர்வரும் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
No comments:
Post a Comment
Leave A Reply