ஜேர்மனியின் முனிச் (Munich) மாகாணத்தில் முதியவர் (57) ஒருவர், பெண்கள் அணியும் உள்ளாடை மற்றும் காலணிகளை அணிந்து, தனது வீட்டின்
சமையலறையின் கதவு அருகில் நின்று, சுய இன்பம் பெற முயற்சித்துள்ளார்.
அப்போது எதிர்பாரதவிதமாக அவர் தனது இருப்புநிலையை தவறியதால், கீழே விழுந்துள்ளார்.
இந்நிலையில் இவரது வீட்டின் வெளியே சில நாட்களாய் நாளிதழ்கள் குவிந்த வண்ணம் இருந்ததால், அண்டை வீட்டுக்காரருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
முதியவர் மரணம் அடைந்திருக்கலாமோ? என எண்ணி அவர் பொலிசில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், முதியவரின் வீட்டை உடைத்து கொண்டு உள்ளே நுழைந்துள்ளனர்.
இதன்பின் அங்கு மயங்கிய நிலையில் இருந்த முதியவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
தற்போது சிகிச்சை பெற்று வரும் முதியவர் அதிஷ்டவசமாக பிழைத்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
No comments:
Post a Comment
Leave A Reply