காயமடைந்தவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று வவுனியா வைத்தியசாலைப் பணிப்பாளர் கு.அகிலேந்திரன் தெரிவித்தார்.
சம்பவத்தில் காயமடைந்தவர் வவுனியா சமயபுரதைச் சேர்ந்த சங்கர் பார்வதி (வயது 29) என்பவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா, சமயபுரம் பகுதியில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே நேற்று வெள்ளிக்கிழமை இரவு தகராறு ஏற்பட்டுள்ளது.
பிரச்சினை முற்றியதால் மனைவி அருகில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் தஞ்சமடைந்துள்ளார்.
இந்த நிலையில் இரவு 10 மணியளவில் மனைவியைத் தேடி அங்கு சென்ற கணவர் அவரை வீட்டிற்கு வெளியே வருமாறு அழைத்துள்ளார். வெளியே வந்த மனைவியை தாக்கி கத்தியால் குத்திக் படுகாயப்படுத்தியுள்ளார் என தெரியவருகிறது.
இது தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கணவன் தலைமறைவாகியுள்ளார் என்றும் அவரை தாம் தேடிவருகின்றனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
Leave A Reply