வேட்புமனு தாக்கல் செய்வதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நாளையுடன் நிறைவடையவுள்ளது.
வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டவுடன் முன்னெடுக்கப்படும் தேர்தல் சட்ட மீறல்களை தடுப்பதற்கு விசேட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் கூறினார்.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாள், உயர்தரப் பரீட்சை நடைபெறும் தினம் என்பதனால், பொலிஸ் திணைக்களத்துடன் இணைந்து விசேட பாதுகாப்பு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
கூட்டம் கூடுதல், பேரணிகள், வாகனப் பேரணிகளை நடத்துவது என்பன முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, நேற்று மாலை 4 மணிவரையில் ஊவா மாகாண சபைத் தேர்தலுக்காக இரண்டு கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளன.
இதுவரையில் 11 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப் பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டது.
No comments:
Post a Comment
Leave A Reply