பிறக்கும் போதே பார்வையற்ற Felix De St-Hilaire என்ற இந்த சிறுவன் blues இசையில் சிறந்து விளங்குவதுடன், கிட்டார் வாசிப்பதிலும் திறமையாகவுள்ளான்.
இந்த சிறுவன் பார்வையற்றவர்களிற்கான கோடைகால முகாமில் கிட்டாரை தனது காலில் வைத்த வண்ணம் B.B. King என்பவரின் “Every Day I Have the Blues” பாடலை முழுமையாக பாடியுள்ளான்.
முகாம் இயக்குநர் இதனை படமாக்கி முகப் புத்தகத்தில் பதிந்துள்ளார்.
அவர் நினைத்துப் பார்க்காத அளவிற்கு இணையம் மூலமாக படு வேகமாக இந்த நிகழ்வு பரவியுள்ளது. 90,000-ற்கும் மேற்பட்டவர்கள் இதனை பகிர்ந்துள்ளனர்.
குறித்த சிறுவனின் தாயார் Marie-Eve Soucy இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், Felix ஆறு மாதத்தில் குறை பிரசவத்தில் பிறந்தவன். பிறக்கும்போதே பார்வையின்றி பிறந்தவன்.
சிறு குழந்தையில் சிறுவர்களிற்கான உயர் கதிரையில் இருக்கும் போதே சுருதி விளையாடுவான் என்று கூறியுள்ளார்.
Felix 6-வயதிலிருந்து கிட்டார் வாசிக்க தொடங்கியுள்ளான்.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
No comments:
Post a Comment
Leave A Reply