கிளிநொச்சியில் மத்திய கல்லூரியில் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் தோற்றும் மாணவியே இவ்வாறு மயங்கி வீழ்ந்தார்.
பின்னர் இவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்த வேளையில் இடம்பெற்ற ஷெல் வீச்சினால் இவர் காயமடைந்திருந்தார்.
அப்போது வெடித்த ஷெல்லின் சன்னம் ஒன்று இவரது தலைப் பகுதியில் இன்னும் இருப்பதாகவும் இதனாலே இவருக்கு திடீரென மயக்கம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இன்றும் இதேபோன்று திடீர் மயக்கம் ஏற்பட்டதால் முழுமையாகப் பரீட்சை எழுதமுடியாத பரிதாப நிலை அவருக்கு ஏற்பட்டது.
No comments:
Post a Comment
Leave A Reply