இந்தநிலையில் நேற்று மதியம் 2 மணியளவில் சரிதா வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில் உள்ள நீரில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற உன்னிகிருஷ்ணன் என்ற வாலிபர் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக கிணற்றில் குதித்து சரிதாவை மீட்டு மேலே கொண்டு வந்தார். அப்போது சரிதா அந்த வாலிபரிடம் ஏற்கனவே தன்னுடைய 2 குழந்தைகளையும் கிணற்றில் வீசி கொன்று விட்டதாக கூறினார்.
இதனால் மேலும் அதிர்ச்சியடைந்த உன்னிகிருஷ்ணன் இதுகுறித்து புதுச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்ததும் புதுச்சேரி போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு மயக்க நிலையில் இருந்த சரிதாவை சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கிணற்றில் குதித்த தீயணைப்பு வீரர்கள் 2 குழந்தைகளின் உடல்களை மீட்டனர். மீட்கட்பட்ட உடலை பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சரிதாவை கைது செய்தனர்.
அவர் ஏன் குழந்தைகளை கொலை செய்து தற்கொலைக்கு முயன்றார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் East News First வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
No comments:
Post a Comment
Leave A Reply