பிரபல காற்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை கருவில் அழிக்க முயற்சி செய்ததாக அவரது தாய் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
உலகில் பிரபலமான காற்பந்து வீரர்களின் பட்டியலில் கிறிஸ்டியானொ ரொனால்டோவும் உள்ளார். அவர் போர்த்துக்கல் மற்றும் ரியல் மாட்ரிட் கிளப் அணிகளுக்காக விளையாடி வருகிறார்.
இந்த நிலையில் அவரை கருவில் சுமந்த போதே அழித்து விட வேண்டும் என்று முயற்சித்தேன் என அவரது தாயார் டோலோரஸ் அவிரோ அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
‘துணிச்சலான தாயார்’ என்ற பெயரில் டோலோரஸ் சுயசரிதை புத்தகம் எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில் ‘ரொனால்டோவை கருவில் இருக்கும் போதே அழிக்க நினைத்தேன். கருவை கலைப்பதற்கு மருத்துவரை அணுகியதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அவர் முடியாது என்று மறுத்து விட்டார். இதனால் வேறு வழியிலாவது கலைத்து விடலாம் என்று நினைத்து பீர் குடித்து விட்டு நீண்ட தூரம் ஓடினேன். ஆனாலும் எனது எண்ணம் ஈடேறவில்லை. பின்னாலில் இந்த ரகசியத்தை தெரிந்து கொண்ட ரொனால்டோ அவ்வப்போது ‘ஜோக்’ செய்வார்.
‘அம்மா என்னை பாருங்கள்...நீங்கள் கருவிலேயே அழிக்க நினைத்தீர்கள். ஆனால் நான் தான் இப்போது சம்பாதித்து உங்களையும் வீட்டையும் காப்பாற்றுகிறேன் என அடிக்கடி சொல்வார்’ என்று அந்த புத்தகத்தில் டோலோரஸ் குறிப்பிட்டுள்ளார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Saturday, July 19, 2014
ரொனால்டோவை கருவில் கொலை செய்ய முயற்சித்த தாய்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
செக்றோ ஸ்ரீலங்கா நிறுவனத்தின் உயர் சபை ஒன்று கூடல் 19.07.2014 ஆம் திகதி நிறுவனத்தின் ஸ்தாபகத் தலைவரும் உளவள ஆலோசகருமான றினோஸ் ஹனீபா தல...
-
புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட உலங்குவானூர்திகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது குடும்பத்தினருமே பயணம் செய்வதாக பொது எதிரணியின் ஜனாதி...
-
நாட்டின் அபிவிருத்திக்கு பொருந்தும் வகையில் பல்கலைக்கழகத்தில் புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தநடவடிக்கை எடுக்க்பட்டுள்ளதாக உயர்கல்வி...
-
கோலாலம்பூர்: மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மாயமானதில், அதில் சென்ற 227 பயணிகளில் யாருக்கும் தொடர்பு இல்லை என்று மலேசிய போலீஸ் தலைவர் திட்டவட...

No comments:
Post a Comment
Leave A Reply