இலங்கை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்று கொடுக்க முயற்சிகள் முன்
எடுக்கப்படுவதாக தம்மிடம் உறுதியளிக்கப்பட்டதாக மத்திய இணையமைச்சர்
பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.இந்திய வெளியுறவுத்துறை
அமைச்சர் சுஷ்மா சுவராஜை நேற்று வெள்ளிக் கிழமை சந்தித்த போதே இந்த உறுதி
மொழி அளிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, எஞ்சிய தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதவிர,
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் இலங்கை
இந்தியாவுக்கு இடையே இணக்கப்பாடு ஏற்பட வேண்டும் என கோரியதாகவும் பொன்.
ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
Leave A Reply