அத்துடன், இஸ்ரேலின் தாக்குதலுக்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் துணைபோவதைக் கண்டிக்கிறார் எனவும் கூறினார். இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் அவர் மேலும் கூறியவை வருமாறு:- "பலஸ்தீனப் பிரச்சினை பாரதூரமாகியுள்ளது.
சட்டத்தையும், நீதியையும், நியாயத்தையும் மதிப்பவர்களால் இதனைக் கண்டிக்காமல் இருக்கமுடியாது. காஸா பள்ளத்தாக்கில் இஸ்ரேல் கொடூரத் தாக்குதலைத் தொடுக்கின்றது. 500 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
எனினும், அமெரிக்க ஏகாதிபத்தியம் இதற்குத் துணைபோகும் வகையில் செயற்படுகின்றது. அதேவேளை, யுத்தக்குற்றத்துக்கு எவராவது தண்டிக்கப்படவேண்டுமானால் அதை இஸ்ரேல் பிரதமருக்கு எதிராகச் செய்யவேண்டும்.
புனித மதத்தலமான அல்ஹக்ஷா மீது கூட தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவ்விடத் தில் ஏனைய மதத்தலங்களும் இருக்கின்றன. புனித நோன்பு மாதத்தில் இவ்வாறு கொடூரத் தாக்குதல் இடம்பெறுவதை அனுமதிக்க முடியாது" - என்று தெரிவித்தார் நீதியமைச்சர் ஹக்கீம்.
No comments:
Post a Comment
Leave A Reply