தலைக்கவசம் அணிந்த நான்கு கொள்ளையர்கள் குறித்த நகைக்கடைக்கு நேற்று மாலை கொள்ளையிடச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சந்தர்ப்பத்தில் கடையின் ஊழியர் ஒருவர் வெளியே வந்து அருகில் இருந்தவர்களிடம் இது தொடர்பில் அறிவித்துள்ளார்.
இதன்பின்னர் போக்குவரத்து கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்ரபிள் ஒருவர், பிரதேச மக்களுடன் இணைந்து இரண்டு கொள்ளையர்களை கைது செய்துள்ளார்.
ஏனைய இருவரும் தப்பிச் சென்றுள்ளதுடன் அவர்களை கைதுசெய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களிடம் இருந்து சிறியரக துப்பாக்கியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் காயமடைந்துள்ளதால், வதுபிட்டிவல வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
No comments:
Post a Comment
Leave A Reply