இந்த தாக்குதல் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
திருகோணமலை பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாகவுள்ள ஹோட்டல் ஒன்றின் உரிமையாளருடன் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 3 இளைஞர்களை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, இந்த கைகலப்பின்போது காயமடைந்த 5 இளைஞர்கள் வைத்தியசாலையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டதாக திருகோணமலை வைத்தியசாலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment
Leave A Reply