திருமணம் முடிப்பதாகக் கூறி, பெண்ணொருவரை காட்டுப் பகுதிக்கு அழைத்துச்
சென்று துஷ்பிரயோகம் செய்த நபரை ஹட்டன் பொலிஸார் நேற்று வியாழக்கிழமை கைது
செய்துள்ளனர்.
ஹட்டன் பகுதியில் பிரபல பாடசாலை ஒன்றில் கடமையாற்றிய குமாஸ்தா பெண்ணை
திருமணம் முடிப்பதாக கூறி அவரை நோர்வூட் காட்டுப் பகுதிக்கு கடந்த 31 ம்
திகதி அழைத்து சென்று; துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
அதன் பின்னர் அப்பெண்ணிடமிருந்த தங்க ஆபரணங்களை அபகரித்து, குறித்த பெண்ணை
அந்த இடத்திலேயே கை, கால்களை கட்டி விட்டு குறித்த நபர்
தப்பிச்சென்றுள்ளார்.
அந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரையே ஹட்டன் பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரை ஹட்டன் நீதவான் அமில ஆரியசேனவின் முன்னிலையில் நேற்று மாலை
ஆஜர்ப்படுத்தியபோது, அவரை, எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில்
வைக்கும்படி நீதவான் உத்திரவிட்டுள்ளார்.
நுவரெலியாவில் வசிக்கும் 31 வயதான மேற்படி சந்தேக நபர் இரண்டு குழந்தைகளின்
தந்தையாவார். மணமகள் தேவை என பத்திரிகைகளுக்கு விளம்பரம் செய்து, அந்த
விளம்பரத்திற்கு பதில் கிடைக்கும் போது தொலைபேசி அழைப்புகளின் ஊடாக
தொடர்புகளை ஏற்படுத்தி இவ்வாறான செயல்களில் அவர் ஈடுபடுவதாக பொலிஸார்
தெரிவித்தனர்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Friday, June 6, 2014
விளம்பரங்கள் மூலம் பெண் துஷ்பிரயோகம்; காதல் மன்னன் கைது
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
கற்பாறைகள் சரிந்து வீழ்ந்தமையால் எல்ல – வெல்லவாய வீதியூடான வாகனப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
-
கனேமுல்ல பஹல யாகொட பகுதியில் துணி வியாபாரி ஒருவரிடம் கப்பம் கோரி மரண அச்சுறுத்தல் விடுத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
கண்டி, பதுளை ஆகிய மாவட்டங்களில் நேற்றிரவு முதல் இன்றிரவு 8.30 வரை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
குருநாகல், பொதுஹர ரயில் விபத்தின் பின்னர் வடக்கு மார்க்கத்தில் இன்று காலை முதல் அலுவலக ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

No comments:
Post a Comment
Leave A Reply