இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் வேவு நடவடிக்கைகளுக்குப்
பயன்படுத்தப்பட்ட ஆளில்லா விமானத்தை ஒத்ததான சிறிய விமானம் ஒன்று
நேற்றுமுன்தினம் யாழ்.குடாநாட்டில் மீட்கப்பட்டது. இதையடுத்து
இந்த விமானம் தொடர்பா மர்மம் நீடித்துவந்த நிலையில் இவ்வாறு
மீட்கப்பட்ட குறித்த விமானம் தொலைத்தொடர்பு நிறுவனத்திற்குச்
சொந்தமானது என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விமானம் தொடர்பான விசாரணைகளின் பின்னர் குறித்த தொலைத்தொடர்பு
நிறுவனம் சட்டபூர்வமான அனுமதியைப் பெற்று பயன்படுத்தி வந்தமை ஆவண
பூர்வமாக நிரூபிக்கப்பட்டமையினாலும் இவ்விமானத்தை
உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளோம் என பொலிஸ் அத்தியட்சகர்
தெரிவித்தார்.
இதேவேளை குறித்த விமானம் அதிக தூரமோ, நேரமோ பயன்படுத்தக் கூடியதில்லை
என்பதால் உரியவர்கள் அடையாளப்படுத்தியதற்கமைய ஒப்படைத்துள்ளோம் எனவும் அவர்
மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Leave A Reply