தென்னிலங்கையில் அளுத்க மவிலும், அதன் அருகிலுள்ள பகுதிகளிலும், கடந்த 15ஆம் திகதி முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த வன்முறைச் சம்பவம் குறித்துக் கருத்து வெளியிட்ட அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ஜென் யக்கி, ‘மதச் சிறுபான்மையர்களைப் பாதுகாக்க இலங்கைக்கு இருக்கும் கடப்பாடுகளை அது நிறைவேற்ற வேண்டும். அத்துடன், நடந்த வன்செயல்கள் குறித்து முழு விசாரணை தேவை” என்று வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை, ஐரோப்பிய ஒன்றியமும் இந்த வன்முறைகள் குறித்துத் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. ‘இலங்கையில் முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக இழைக்கப்படும் அண்மைய வன்முறைகள் தமக்கு கவலையளிக்கிறது.
இனவாத வன்முறை, வெறுப்பைத் தூண்டும் செயல்களால் இலங்கையின் ஸ்திரத்தன்மையைப் பேணமுடியாது. நாங்கள் சட்டத்தின் ஆட்சியை உறுதிசெய்யவே இலங்கை அரசைக் கோருகிறோம். அதற்காக இலங்கை அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் தயாராகவுள்ளோம்” என்று கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றியக் குழு தெரிவித்திருக்கிறது.
No comments:
Post a Comment
Leave A Reply