காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி
ஆணைக்குழு மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுத்த இரண்டாம் கட்ட அமர்வில்
புதிதாக 212 முறைப்பாடுகளை பதிவுசெய்துள்ளது.
மட்டக்களப்பு
மாவட்டத்தில் காணாமற்போனோர் தொடர்பாக கிடைக்கப்பெற்ற 195
முறைப்பாடுகளுக்கான சாட்சி விசாரணைகள் இடம்பெற்றதாக காணாமற்போனோர் தொடர்பான
முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர்
எச.டபிள்யூ.குணதாச தெரிவித்தார்.
இந்த அமர்வில் பதிவுசெய்யப்பட்ட
சாட்சியங்களில் அதிகமானவை காத்தான்குடி – குருக்கள் மடத்தில் காணப்படுவதாக
கூறப்படும் மனித புதைகுழி தொடர்பிலேயே முன்வைக்கப்பட்டுள்ளன.
காணாமற்போனோர்
தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின்
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இரண்டாம் கட்ட சாட்சிப் பதிவுகள் கடந்த ஆறாம்
திகதி காத்தான்குடி பிரதேச செயலகத்தில் ஆரம்பமானது.
மட்டக்களப்பில் நேற்றைய தினத்துடன் அமர்வுகளை நிறைவு செய்துள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதனைத்
தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் அடுத்த மாதம் ஆணைக்குழுவின்
அமர்வுகள் இடம்பெறவுள்ளதாக அதன் செயலாளர் எச.டபிள்யூ.குணதாச தெரிவித்தார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Tuesday, June 10, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
பிரதமர் மோடி நேற்று சியாச்சின் பனி மலைக்கு சென்றார். நாட்டின் உயரமான மலை பகுதி இது.
-
யாழ் நகரப்பகுதிக்கு அண்மையில் உள்ள கலவன் பாடசாலை ஒன்றில் கல்வி கற்பித்த ஆசிரியருக்கு காதல் கடிதம் கொடுத் துள்ளார் உயர் தர வகுப்பில் கல்...
-
காதுகளில் கேட்பொலிக் கருவிகளைப் பொருத்தி செல்லிடப்பேசிகள் மூலமாகவும், கேளிக்கைகளில் பெரிய ஒலிப் பெருக்கிகள் மூலமாகவும் அதிக ஒலியில் இசையை ...
-
இலங்கை கடல் எல்லையினுள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 46 பேரையும் இன்று புத...

No comments:
Post a Comment
Leave A Reply