எமது தளத்தை பார்வையிட்டோர்
Thursday, May 22, 2014
வடமாகாண ஆசிரியர் வெற்றிடம் தொடர்பில் பாராளுமன்றத்தில் வாதப் பிரதிவாதம்
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிறேமதாஸ எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிப்பதற்காக ஐந்து தடவைகள் கால அவகாசம் கோரப்பட்டதால் பாராளுமன்றத்தில் இன்று வாதப் பிரதிவாதம் ஏற்பட்டுள்ளது.
தாம் 2012 ஆம் ஆண்டு எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு இதுவரை பதில் வழங்காமல் ஆளும் கட்சியினர் கால அவசாகம் பெற்றுவந்துள்ளதாக சஜித் பிரேமதாஸ இதன்போது சபையின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி பாராளுமன்ற உறுப்பினரின் கேள்விக்கான பதிலை மேலும் தாமதப்படுத்தாமல் வழங்குமாறு ஆளும் தரப்பினருக்கு அறிவித்தார்.
ஆளும் கட்சியின் பிரதம கொறடா அமைச்சர் தினேஸ் குணவர்தன இதன்போது கருத்து வெளியிடுகையில், பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸவின் கேள்விக்கு பதிலளிப்பதற்கு கால அவகாசம் கோரப்பட்டதை ஒப்புக்கொள்வதாக கூறினார்.
வெளிநாடுகளில் தொழில் புரிவோருக்கான வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் தொடர்பிலேயே இந்த கேள்வி எழுப்பப்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சம்பந்தப்பட்ட அமைச்சர் சுகயீனம் காரணமாக பாராளுமன்றத்தில் பிரசன்னமாகவில்லை என தெரிவித்த ஆளும் கட்சியின் பிரதம கொறடா, அதற்கான பதிலை வழங்க முடியாதுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட அமைச்சரை நாளை பாராளுமன்றத்திற்கு அழைத்து பதில் வழங்குமாறு உத்தரவிடுமாறு எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசங்க இதன்போது அக்ராசனத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஆராயுமாறு பாராளுமன்ற செயறலாளருக்கு ஆலோசனை வழங்குவதாக இதன்போது பிரதி சபாநாயகர் அறிவித்துள்ளார்.
இதேவேளை, வடமாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யபப்படாமை தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ சபையில் இன்று கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்விக்கு பதிலளித்த கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன, இந்த விடயத்தில் மத்திய அரசாங்கத்திற்கு மாத்திரமன்றி மாகாண சபைக்கும் பொறுப்பு உள்ளதாக தெரிவித்தார்.
ஒரே தடவையில் அற்புதம் நிகழ்த்துவதைப் போன்று ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யமுடியாது எனவும் கல்வி அமைச்சர் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
திருகோணமலை புல்மோட்டை பிரதான வீதியில் இக்பால் நகர் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரி...
-
செக்றோ ஸ்ரீலங்கா நிறுவனமும் சாய்ந்தமருது இணையத்தளமும் இணைந்து மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி வகுப்பினை இன்று நடாத்தியது.
-
நீர்நிலைகளில் வாழும் உயிரினம் முதலை. சேறு மற்றும் மண் நிறைந்த நீர்நிலையில் வசித்து வந்த முதலை ஒன்று மதிய வேளையில் இரை தேடி அலைந்து கொண்ட...
-
கொழும்பு 12 மற்றும் கொழும்பு 15 ஆகிய பிரதேசங்களுக்கு இன்றிரவு 8 மணிமுதல் நாளை அதிகாலை 6 மணி வரை 10 மணித்தியாலங்கள் நீர்விநியோகம் தடைப்படு...
No comments:
Post a Comment
Leave A Reply