புதுகுடியிருப்பு சிவநகர் பகுதியை சேர்ந்த சிறுமியே நேற்று மாலை மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமியின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகள் இன்று முன்னெடுக்கப்படவுள்ளன.
மின்னல் தாக்கத்திற்கு இலக்கான உயிரிழந்த சிறுமியின் தாய் பலத்த காயமடைந்த நிலையில் முல்லைதீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, கிண்ணியா, வான்-எல பனிச்சங்குளம் பகுதியில் மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் மேலுமொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த அனர்த்தம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
மின்னல் தாக்கி பலத்த காயங்களுக்குள்ளான நபர் கிண்ணியா வைத்தியசாலையின் திடீர் விபத்துக்கள் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் கூறினார்.
சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் கிண்ணியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply