கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனைகுடியிருப்பு கிராமத்தில் 7 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதான 18 வயது இளைஞனை எதிர்வரும் 16 திகதி வரை
விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கடந்த மாதம் 27 ஆம் திகதி கல்முனை பொலிஸ் நிலையத்தில் உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபிள் யு.ஏ.கப்பாரின் வழிகாட்டலில் பெரும் குற்றத்தடுப்பு பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த மேற்படி சந்தேக நபர் ஞாயிற்றுக்கிழமை சேனைகுடியிருப்பு கிராமத்தில் வைத்து கைதுசெய்யப்படடார்.
பொலிஸார் குறித்த சந்தேக நபரை கல்முனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய நிலையில் பதில் நீதிவான் எஸ்.பேரின்பராசா எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
சிறுமி கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சைப்பெற்று வருகின்றார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Monday, May 5, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
கொழும்பு அல்லாத நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்று முதல் காலை மற்றும் மாலை வேளைகளில் மின் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இல்லை என்றால் விட்டுவிடுங்கள். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. நல்ல மனிதனுக்கு ஒரு சொல்: இல்லை. இருந்தால் நான் உங்களுக்குக் கொடுக்கலாம், கொடு...
-
காதுகளில் கேட்பொலிக் கருவிகளைப் பொருத்தி செல்லிடப்பேசிகள் மூலமாகவும், கேளிக்கைகளில் பெரிய ஒலிப் பெருக்கிகள் மூலமாகவும் அதிக ஒலியில் இசையை ...
-
ஆப்ரிக்க யானைகள்--- பெரிய விலங்குகள் குறைந்தால் மனிதர்களுக்கு நோய்கள் ? ...

No comments:
Post a Comment
Leave A Reply