இஸ்லமாபாத்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லமாபாத்தில் காய்கறி மார்க்கெட்டில் நேற்று திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில், மார்க்கெட்டுக்கு வந்திருந்த அப்பாவி மக்கள் 20 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாயினர். மேலும் 100க்கும்
மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், மீட்புக் குழுவினரின் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பாகிஸ்தான் போலீசார், நடத்திய முதற்கட்ட விசாரணையில் பாகிதான் தலிபான் தீவிரவாத கும்பல் செய்த நாசவேலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்துவருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
யாழ் நகரப்பகுதிக்கு அண்மையில் உள்ள கலவன் பாடசாலை ஒன்றில் கல்வி கற்பித்த ஆசிரியருக்கு காதல் கடிதம் கொடுத் துள்ளார் உயர் தர வகுப்பில் கல்...
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்தியாவுக்குள் காலடி எடுத்து வைக்கக் கூடாதென்றும், அதனை பா.ஜ.க. அனுமதிகக் கூடாதென்றும் கோரி, தமிழகத்திலுள்ள பா....
-
காபூல்: ஆப்கானிஸ்தானில் கடந்த 3 நாட்களாக பெய்த கடும் மழை வெள்ளத்தில் சிக்கி 100 பேர் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்து...
-
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்பேசும் மக்களாகிய தமிழர் மற்றும் முஸ்லிம்களின் ஆதரவு யாருக்கு என்பதை அறிந்து கொள்வதில் பலரும் ஆர்வமாக ...

No comments:
Post a Comment
Leave A Reply