blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, October 15, 2016

வௌி மாகாணங்களில் நியமனம் பெற்ற கிழக்கு மாகாணத்தின் அனைத்து ஆசிரியர்களுக்கும் எதிர்வரும் 19 ஆம் திகதிக்குள் கிழக்குக்கே நியமனம்

2016 ஆம் ஆண்டு கல்வியியற் கல்லூரிகளில் கற்கையை நிறைவு செய்து வௌி மாகாணங்களில் நியமனம் பெற்ற கிழக்கு மாகாணத்தின் அனைத்து ஆசிரியர்களையும் எதிர்வரும் 19 ஆம் திகதிக்குள் சொந்த மாகாணத்திலேயே நியமனங்களை வழங்குவதாக  கல்வியமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாரச்சி கிழக்கு மாகாண முதலமைச்சரிடம்  இன்று உறுதியளித்துள்ளார். 


இன்று  கிழக்கு மாகாண முதலமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட  கல்வியமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி   இவரகளுக்கான நியமனங்களை சொந்த மாகாணத்திலேயே வழங்குவதாக வாக்குறுதியளித்துள்ளாார்

இதன் மூலம் தீர்வொன்று இன்றி கடந்த சில நாட்களாக பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கிய கல்வியியற் கல்லூரி ஆசிரியர்களுக்கு  இதன் மூலம் தீர்வொன்று கிட்டியுள்ளதாக முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹ்மட்  கூறினார்.

வௌி மாகாணங்களுக்கு நியமனம் பெற்ற ஆசிரியர்களை சொந்த மாகாணத்தில் நியமிக்க உதவிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ,பிரதமர் ரணில் விக்ரமசிங்க,கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் கல்வியமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி ஆகியோருக்கு முதலமைச்சர் தமது நன்றிகளையும் தெரிவித்தார்்

அத்துடன் கிழக்கில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறைக்கும் விரைவில் தீர்வு வழங்குவதாக கல்வியமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி தெரிவித்ததாக முதலமைச்சர் கூறினார்

-ஊடகப் பிரிவு-

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►