பிரான்ஸில் இடம்பெற்ற தீவிரவாத
தாக்குதல் தொடர்பில், தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாக ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொடூரமான தீவிரவாத அனுபவத்தைக் கொண்ட
நாடு மற்றும் மக்கள் என்ற வகையில், பரிஸ் தாக்குதலை தான் கண்டிப்பதாக
ஜனாபதி மைத்திரிபால சிறிசேன தனது டுவிற்றர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
உலகம்
முழுவதிலுமுள்ள அனைத்து மக்களும் ஒன்றுபட்டு, உலகம் முழுவதும் பரவிக்
காணப்படும் தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை அடியோடு ஒழிக்க நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு என அவர் மேலும்
தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply