blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Tuesday, August 4, 2015

சிறுபராயத்தில் ஒழுக்கத்தை கற்பிக்காவிட்டால் கோட் சூட் அணிந்தாலும் ஒழுக்கம் வராது -கவுன்சலர் றினோஸ் ஹனீபா


கல்முனை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் கல்முனை இக்பால் கழகத்தின் ஆரம்ப பிரிவு மாணவர்களின் பெற்றோருக்கான நிகழ்ச்சி கடந்த திங்கற்கிழமை இக்பால்கழக மண்டபத்தில் இடம் பெற்றது இதில் கவுன்சலர் றினோஸ் ஹனீபா வளவாளராக கலந்து கொண்டு உரையாற்றும் போது' சிறுபராயத்தில் ஒழுக்கத்தை கற்பிக்காவிட்டால் கோட் சூட் அணிந்தாலும் ஒழுக்கம் வராது
எமது பிள்ளைச் செல்வங்களை நல்ல விடயங்களை பராட்டுகின்றவர்களாக நல்ல விடயங்களை முன்னின்று செய்பவர்களாக நல்லவர்களை பாராட்டுகின்றவர்களாக நாம் உருவாக்கத் தவறினால் பெற்றோரான நீங்கள் பிள்ளைகளுக்கு எவ்வளவுதான் நல்ல விடயங்களை செய்தாலும் அதனை பிள்ளைகள் உணர்ந்து கொள்ளமாட்டார்கள் அதேபோல சமூகத்தில் நல்லவிடயங்களை செய்கின்றவர்கள் மீது பொறாமை கொண்டு காழ்ப்புணர்வுடன் செயற்படுவார்கள் எனவே ஆரம்ப பருவத்தில் ஒழுக்கத்தை கட்டாயம் கற்பிக்க வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலக செயலாளர் மொஹமட் கனி, வளவாளர் வைத்தியர் கனேஷ்ராஜ், கவுன்சலர்களான தஹ்லான், சியாம் மற்றும் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டார்கள்.




  














செய்தி: செக்றோ மீடியா

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►