நெல்லியை வலிமை நெல்லி, உணவு நெல்லி, அமிர்த நெல்லி என போற்றுகின்றனர். நெல்லி உயிராற்றலை வளர்க்கும் ஓர் ஒப்பற்ற உணவு.
ஆரோக்கிய வாழ்விற்கு நெல்லிச்சாறு அருமையான நண்பன் எனலாம். இது உருண்டையாகவும், சிறிது பச்சை மஞ்சள் நிறத்திலும் இருக்கும். மழைக்காலங்களில் கிடைக்கும்.
நெல்லியின் மருத்துவக் குணங்கள் போல் வேறு எந்த பழத்திலும் இல்லை எனலாம். காயகல்பம் தயாரிப்பு நெல்லியால் தான் உருவாகிறது. தாது விருத்தி மற்றும் தலை முடி டானிக்காக பயன்படுகிறது. வைட்டமின் C அதிக அளவில் உள்ளது. கண்களை அதன் இமை போல் நெல்லிச்சாறு பாதுகாக்கிறது.
நெல்லியை காய வைத்து அதன் மூலம் வருடம் முழுவதும் சாறு எடுத்து சாப்பிட்டு உயரிய ஆரோக்கியம் பெறலாம். ஒரு லிட்டர் நீரில் ஒரு ஸ்பூன் நெல்லிச்சாறு கலந்து உடனடியாக சுத்தமான குடிநீர் தயாரிக்கலாம்.
► நெல்லிக்கனியில் உள்ள சத்துக்கள்:
நீர்=82%
புரதம்=0.5%
கொழுப்பு=0.1%
மாவுப்பொருள்=14%
நார்ச்சத்து=3.5%
கால்சியம்=50 யூனிட்
பாஸ்பரஸ்=20 யூனிட்
இரும்பு=1.2 யூனிட்
வைட்டமின் C=600 யூனிட்
இவை அனைத்தும் 100 கிராம் நெல்லிச்சாறில் உள்ள சத்துகள்.
மருத்துவக் குணங்கள்:
• பல் நோய், அஜீரணம், மூட்டு வலி குறையும். அருமையான கண் பார்வை தரும்.
• நீண்ட ஆயுளுக்கு நாளும் நெல்லிச்சாறு அருந்த வேண்டும்.
• பசியின்மை விலகி உண்மை பசியை உணர வைக்கும்.
• மாதவிடாய், மலச்சிக்கல், மூலம் சரியாகும். பெண்களின் கர்ப்பப்பை கோளாறு, நீரிழிவு, இரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி விலகுகிறது.
குறிப்பு:
நெல்லியை காய வைத்தாலும் வைட்டமின் C குறைவதில்லை. மாறாக நிழலில் காய வைக்கும் போது அதிகரிக்கிறது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Friday, April 3, 2015
உயிராற்றலை வளர்க்கும், மரணத்தை தள்ளிப்போடும் நெல்லிக்கனி
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
சாவகச்சேரி நகரசபையால் 74 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பொன்விழா மண்டபத்தை இன்று காலை 9.30 மணிக்கு வடக்குமாகாண முதலமைச்சர் க.வி....
-
இந்த வருடத்தின் முதலாவது சந்திர கிரகணம் இன்று தென்படவுள்ளது.
-
கம்பஹா மாவட்டத்தில் உள்ள உற்பத்தி நிலையம் ஒன்றிலிருந்து மண்ணெண்ணெய் கலந்த தண்ணீர் போத்தல்களை நுகர்வோர் அபிவிருத்தி அதிகார சபையினர் கைப்பற்ற...
-
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சிலோன்டொபாகோ நிறுவனத்தின் அதிகாரிகள் முன்னிலையில் தன்னை அவமானப்படுத்தியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன த...
No comments:
Post a Comment
Leave A Reply